திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 121 பேரை இதுவரை விமானம் மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்கள் சீனா பே விமான படை தளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 22 பேர் விமானம் மூலம் மீட்க பட்டதுடன், கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை மூதுர் நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மாவலி கங்கையின் பெருக்கெடுப்பும் மாவிலாற்றின் உடைப்பும் குளங்களின் வான் திறப்பும் கிராமங்களில் உட் புகுந்து மக்களின் இயல்பு வாழ்வைப் பெருமளவு பாதித்துள்ளது.
திருகோணமலை மூதூர் பிரதான தரைவழிப் பாதை உடைப்பெடுத்துள்ளது.வயல் வெளிகள் யாவுமே கடல்போல் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

