Home இலங்கைசீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 36,088 நபர்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 36,088 நபர்கள் பாதிப்பு

by admin
யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 ஆயிரத்து 193 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அத்தோடு 2 வீடுகள் முழுமையாகவும் 256 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 51 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 5ஆயிரத்து 243 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More