மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (3) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

