Home இலங்கைநெடுந்தீவு மீனவர்கள் பாதிப்பு

நெடுந்தீவு மீனவர்கள் பாதிப்பு

by admin

 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மீன்பிடிக்காக நெடுந்தீவு கடல் பகுதியில் தமது வலைகளை விரித்து காத்திருந்த போது, நெடுந்தீவு கடற்பரப்பினுள் பல படகுகளில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களால் வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த வாரம் நிலவி வந்த சீரற்ற காலநிலையால் கடலுக்கு தாம் செல்லாத நிலையில் வாழ்வாதரத்திற்காக பெரும் இடர்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது காலநிலை சீரடைந்ததால், தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் எமது பெறுமதியான வலைகளை அறுத்து நாசமாக்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக வருமானமின்றி பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டு வந்த நிலையில் தற்போது எமது வலைகளை அறுத்து சென்றமையால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.
இது தொடர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பதுடன், நெடுந்தீவுக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் அத்துமீறலகளை கட்டுப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More