சூடானில் இ ஒரு துணை ராணுவப்படை அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மழலையர் பள்ளி (கிண்டர்கார்டன்) மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், அப்பாவிப் பொதுமக்கள் 50 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 33 குழந்தைகளும் அடங்குவர்.
🕊️ அப்பாவி உயிர்கள் பலி!
-
சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரில் ஒன்றான துணை ராணுவப்படையின் (RSF – Rapid Support Forces) கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
-
இந்தத் தாக்குதல் அந்த மழலையர் பள்ளியை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இக்கோரச் சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
போர் வலயத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் இத்தகைய கொடூரமான தாக்குதல்கள் உலக அளவில் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

