Home இலங்கை🤝 ‘டித்வா’ புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! 🇺🇸🇱🇰!

🤝 ‘டித்வா’ புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! 🇺🇸🇱🇰!

by admin

🇺🇸🇱🇰 ‘டித்வா’ புயல் அனர்த்தத்தின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக, அமெரிக்காவின் வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules ரக விமானங்களும், அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினை (CRG) சேர்ந்த வீரர்களும் இன்று (டிசம்பர் 7, 2025) கட்டுநாயக்க விமானத்தளத்தினை சென்றடைந்தனர்.

முக்கிய தகவல்கள்:

🇺🇸🇱🇰வருகை:
குவாமிலிருந்து செயற்படும் 36ஆவது CRG பிரிவினர் இந்த நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

🇺🇸🇱🇰வரவேற்றவர்கள்:
அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருன ஜயசேகர ஆகியோர் இவர்களை வரவேற்றனர்.

🇺🇸🇱🇰பணி:
அமெரிக்க அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் இணைந்து, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமான நிவாரணப் பொருள் விநியோகங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

🇺🇸🇱🇰உதவி:
இக்குழுவினர் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் (Logistical) உதவிகளை வழங்குவார்கள்.

இந்த அவசர உதவி, இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குப் பெரும் பலம் சேர்க்கும்!

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More