யாழ்ப்பாணம், சங்கானைப் பகுதியில் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
🛑 சம்பவம் குறித்த விவரம்:
-
சங்கானையைச் சேர்ந்த குறித்த நபர், சிறுமியின் பெற்றோரிடம் இருந்து அச்சிறுமியை வீட்டு வேலைகளுக்காக நீண்டகாலமாக அழைத்துச் சென்று வந்துள்ளார்.
-
அவ்வாறு அழைத்துச் செல்லப்படும்போது, அவர் அச்சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
⚖️ சட்ட நடவடிக்கை:
-
இது குறித்து மானிப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்டகாவல்துறையினர் குறித்த குடும்பஸ்தரைக் கைது செய்தனர்.
-
கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
🏥 சிறுமியின் நிலை:
-
பாதிக்கப்பட்ட சிறுமியை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மானிப்பாய் காவல்துறையினருக்கு மன்று கட்டளையிட்டுள்ளது.

