Home இலங்கை🔔 வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து! 🎉

🔔 வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து! 🎉

by admin

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ‘சேவையின் தேவை கருதிய இடமாற்றங்கள் – 2026’ அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வித் திணைக்களம் அறிவித்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீளப் பெறப்பட்டுள்ளது.

🏛️ நீதிமன்றில் நடந்தவை:
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் (Ceylon Teachers’ Union) இந்த இடமாற்றங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, கல்வித் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வழங்கப்பட்டிருந்த அனைத்து இடமாற்றங்களையும் மீளப் பெறுவதாக மன்றுக்கு அறிவித்தார்.

இதையடுத்து, ஆசிரியர் சங்கத்தினர் வழக்கைமீளப்பெற்றதையடுத்து, குறித்த வழக்கு முடிவுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

#NorthProvince #TeachersTransfer #EducationNews #CeylonTeachersUnion #யாழ்ப்பாணம் #வடமாகாணம் #ஆசிரியர்சங்கம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More