மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த “வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை” (Red Alert) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
📍 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
-
கண்டி மாவட்டம்: உடுதும்பர, மெததும்பர, மினிபே.
-
நுவரெலியா மாவட்டம்: நில்தண்டஹின்ன, மத்துரட்ட, ஹங்குரன்கெத, வலப்பனை.
⚠️ ஏனைய மாவட்டங்கள்:
பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
🌦️ இன்றைய வானிலை நிலவரம்:
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லாத வானிலை நிலவக்கூடும்.
-
எனினும், ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
-
மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடமேல் மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
#SriLankaWeather #LandslideAlert #NBRO #Kandy #NuwaraEliya #SafetyFirst #LKA #RedAlert #TamilNews #WeatherUpdate

