181
அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மரணித்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த பொதுமக்களுக்காக, யாழ். சாவகச்சேரி நகர சபையில் நேற்று (22) அஞ்சலி செலுத்தப்பட்டது.
சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டு அமர்வு நேற்று நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக:
இந்த அஞ்சலி நிகழ்வில் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தமது இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
Spread the love

