277
முக்கிய விபரங்கள்:
கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் ஊடாகக் கிடைத்த அநாமதேய தகவலை அடுத்து, அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அநாமதேயத் தகவல்: மாவட்ட செயலகத்திற்கு மின்னஞ்சல் (Email) மூலம் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பலப்படுத்தல்: தகவல் கிடைத்த உடனடியாக காவல்துறையினா் , காவல்துறைவிசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் மோப்ப நாய் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
சோதனை நடவடிக்கை: செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலை: செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அச்சுறுத்தல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love

