176
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, தையிட்டி விகாரையினால் தமது காணிகளை இழந்த மக்கள், அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
தையிட்டி போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக தொிவித்த தையிட்டி மக்கள் , மக்களிடம் உள்ள காணி உறுதிகள் பொய்யானவை என அர்ச்சுனா இராமநாதன் கூறியதை வன்மையாகக் கண்டித்துள்ளனர். “எங்கள் உறுதிகள் பொய்யானவை என அவர் நிரூபிக்கட்டும்” எனவும் அவா்கள் சவால் விடுத்துள்ளனர்.
மேலும் மாவட்ட செயலர் (அரச அதிபர்) மற்றும் ஆளுநர் ஆகியோர் காணி உரிமையாளர்களுடன் பேசாமல், புத்த பிக்குவுடன் மட்டும் பேசி முடிவெடுப்பது ஒருதலைப்பட்சமானது எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் “எங்களுக்கு மாற்றுக்காணியோ அல்லது நஷ்டஈடோ தேவையில்லை, எமது சொந்தக் காணியே வேண்டும்” என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே உள்ள பூர்வீகக் காணி உறுதிகள் தையிட்டி மக்களிடம் உள்ளதாகவும், அவை ஏற்கனவே அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“காணியை விட்டுத் தருவதாகப் பிக்கு கூறுவது நகைப்புக்குரியது, இது அவர் தந்தது அல்ல, எமது பூர்வீகச் சொத்து” என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Spread the love

