Home இலங்கை⚓ நெடுந்தீவில் 10  இந்திய மீனவர்கள்  கைது –  படகு  பறிமுதல்

⚓ நெடுந்தீவில் 10  இந்திய மீனவர்கள்  கைது –  படகு  பறிமுதல்

by admin

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 10 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (13-01-2026) செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுந்தீவு (Delft Island) கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களது படகும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்ட நிலையில் படகு மயிலிட்டி துறைமுகத்தில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மயிலிட்டிக்கு கொண்டு வரப்பட்ட மீனவர்கள், நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ஊர்காவற்துறை (Kayts) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.

Tag Words: #JaffnaNews #IndianFishermen #SriLankaNavy #Neduntheevu #Myliddy #FisheriesDispute #BreakingNewsSL #KaytsCourt #BorderSecurity

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More