106
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் எவ்வித அனுமதியும் இன்றி, சுமார் இரண்டு மாத காலமாக மாணவி ஒருவர் விரிவுரைகளில் கலந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
🧐கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீடத்தின் புதிய மாணவர்களுக்கான கற்கை நெறிகள் தொடங்கின. கண்டியைச் சேர்ந்த ஒரு யுவதி, தன்னை ஒரு மருத்துவ மாணவி என நம்பவைத்து, பல்கலைக்கழக விடுதியிலும் (Hostel) பதிவுகளை மேற்கொண்டு தங்கியுள்ளார். கடந்த 2 மாதங்களாக எவ்வித தடையுமின்றி ஏனைய மாணவர்களுடன் இணைந்து விரிவுரை மண்டபத்திற்குச் சென்று கல்வியைத் தொடர்ந்துள்ளார்.
🔍கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்களைக் குழுக்களாகப் பிரிக்கும் பணி நடைபெற்றது. அந்தப் பிரிவில் 202 மாணவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 203 மாணவர்கள் இருந்ததைக் கண்ட பேராசிரியர்கள் குழப்பமடைந்தனர். தீவிர ஆய்வுக்குப் பிறகு, அந்த யுவதி பல்கலைக்கழக அனுமதி பெறாதவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
📑விசாரணையில் அந்த யுவதி உயிரியல் (Biology) பாடத்தில் வெறும் 3 ‘S’ சித்திகளை மட்டுமே பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. தகுதி இல்லாமலேயே மருத்துவக் கனவோடு இவ்வாறான துணிகரமான செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
⚖️இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். மருத்துவ பீடத்தினர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பேரில் அந்த யுவதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Jaffna #UniversityOfJaffna #MedicalFaculty #ViralNews #Education #SriLanka #JaffnaNews #UGC #MedicalStudent #ShockingNews #TamilNews
Spread the love

