Home உலகம்சீனாவிற்கு ஒரே நாளில் இரு பெரும் பின்னடைவு: இரண்டு ராக்கெட்டுகள் தோல்வி!

சீனாவிற்கு ஒரே நாளில் இரு பெரும் பின்னடைவு: இரண்டு ராக்கெட்டுகள் தோல்வி!

by admin
சீனாவிற்கு ஒரே நாளில் இரு பெரும் பின்னடைவு: இரண்டு ராக்கெட்டுகள் தோல்வி! 🛰️❌
சீனாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் அரிதான ஒரு கருப்பு நாளாக ஜனவரி 17 அமைந்துள்ளது. ஒரே நாளில் ஏவப்பட்ட இரண்டு ராக்கெட்டுகளும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியைத் தழுவியுள்ளன.
1️⃣ லாங் மார்ச் 3B (Long March 3B): கடந்த சனிக்கிழமை அதிகாலை 12:55 மணியளவில் சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து (Xichang) ஏவப்பட்டது.
ராணுவ மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டிற்காகக் கருதப்படும் Shijian-32 என்ற ரகசிய செயற்கைக்கோளை சுமந்து சென்ற இந்த ராக்கெட், அதன் மூன்றாவது நிலையில் (Third stage) ஏற்பட்ட கோளாறு காரணமாக தோல்வியடைந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக (296 வெற்றிகரமான ஏவுதல்கள்) நீடித்த லாங் மார்ச் ராக்கெட்டுகளின் தொடர் வெற்றிப் பயணம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
2️⃣ ச என்ற இந்த ஏவுகணை ரெஸ்-2 (CERES-2):அன்று மதியமே 12:08 மணியளவில் ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து (Jiuquan) ஏவப்பட்டது இது ‘கேலக்டிக் எனர்ஜி’ (Galactic Energy) என்ற தனியார் நிறுவனத்தின் புதிய ரக ராக்கெட் ஆகும். தனது முதல் பயணத்திலேயே (Maiden Flight) இது விபத்துக்குள்ளானது. இதில் கொண்டு செல்லப்பட்ட 6 வணிக ரீதியிலான செயற்கைக் கோள்களும் அழிந்தன.
சீனா தனது விண்வெளித் திறனை உலகிற்கு நிரூபித்து வரும் வேளையில், ஒரே நாளில் அரசு மற்றும் தனியார் என இரண்டு தளங்களிலும் ஏற்பட்ட இந்தத் தோல்விகள் அந்நாட்டின் விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தத் தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் (CASC) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
________________________________________
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More