Home இலங்கைசக்கர நாற்காலியில் இலங்கை முழுவதுமான ஒரு வரலாற்றுப் பயணம்! ♿

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதுமான ஒரு வரலாற்றுப் பயணம்! ♿

by admin

 

வவுனியாவைச் சேர்ந்த சாதனை இளைஞன் மக்கின் முகமது அலி (வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணித் தலைவர்), நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மன்னாரிலிருந்து தனது சக்கர நாற்காலிப் பயணத்தை நாளை ஆரம்பிக்கின்றார்.

📍 சுமார் 1500 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பயணத்தின் பின்னணியில் உன்னத நோக்கங்கள் பல உள்ளன:

நாட்டின் கடினமான காலப்பகுதிகளில் (அனர்த்தங்களின் போது) மனிதாபிமான உதவிகளை வழங்கிய சர்வதேச நாடுகளுக்கும், புலம் பெயர் உறவுகளுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தல்.

இனம், மதம் கடந்து அனர்த்த காலங்களில் இலங்கை மக்கள் காட்டிய ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் பறைசாற்றுதல்.

படித்த மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி முடங்கியுள்ள நிலையை மாற்றி, அவர்களுக்கான உரிய வேலைவாய்ப்புகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தல்.

🤝 அரச அதிபருடன் சந்திப்பு:

இன்று திங்கட்கிழமை (19) காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அலி, மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனைச் சந்தித்து தனது பயணத்தின் நோக்கம் குறித்துத் தெளிவுபடுத்தினார்.

நாளை செவ்வாய்க்கிழமை (20) மன்னாரில் இருந்து ஆரம்பமாகும் இந்த அசாத்தியமான பயணத்திற்கு மக்கள் அனைவரும் தமது பேராதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மன உறுதி இருந்தால் தடைகளைத் தகர்த்து சாதனை படைக்கலாம் என்பதற்கு அலியின் இந்தப் பயணம் ஒரு சிறந்த சான்று! 🌟

#Inspiration #WheelchairJourney #SriLanka #Unity #Inclusion #MannarToCoastline #AccessibilityMatters #NorthernProvinceCricket #Bravery #SriLankaIndependence #SupportDisabledTalents #VavuniyaHero

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More