Home இலங்கை⚖️ நாமலுக்கெதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு

⚖️ நாமலுக்கெதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு

by admin

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பணமோசடி வழக்கு   ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இன்று (ஜனவரி 29, 2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  NR கன்சல்டன்சி  நிறுவனத்தில் 15 மில்லியன் ரூபாய் முதலீடு செய்தமை தொடர்பான இந்த வழக்கில், மேலதிக நடவடிக்கைகள் குறித்து இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட போதிலும், அதற்கான எவ்வித அறிவுறுத்தல்களும் இதுவரை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு வசந்த சமரசிங்கவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஆலோசனை நிறுவனம் ஒன்றில் 15 மில்லியன் ரூபாயை முதலீடு செய்து பணமோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடா்பில் நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நித்ய சேனானி சமரநாயக்க, சுஜானி போகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார கணேகொட ஆகியோர் இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலையாகியிருந்தனா்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Tag Words: #NamalRajapaksa #MoneyLaundering #ColomboCourt #SriLankaPolitics #LegalNews #SLPP #CID #BreakingNewsLKA #JusticeSystem #LKA

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More