Home இலங்கை👮 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

👮 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

by admin

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், நிர்வாகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை சேவையின் முக்கிய பிரிவுகளில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதிக்  காவல்துறை மா அதிபர் ஈ.எம்.ஜி.ஜே. சேரம் காலி பிரிவிலிருந்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி காவல்துறை மா அதிபர் எச்.சி.ஏ. புஷ்பகுமார காலி பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.எச்.ஈ.எல். பெரேரா கம்பளைப் பிரிவிலிருந்து கொழும்பு வடக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.என். குணவர்தன மொனராகலைப் பிரிவிலிருந்து காவல்துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பி.ஏ.ஆர். புஷ்பகுமார கொழும்பு வடக்கு பிரிவிலிருந்து விசேட விமான நிலையப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.ஏ. உதய குமார வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து களுத்துறைப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எஸ்.பி. விக்ரமசிங்க காவல்துறை தலைமையகத்தின் மேலதிக தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இருந்து, மொனராகலைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கண்டி காவல்துறை அத்தியட்சகராகக் கடமையாற்றிய பி.டி. இலங்ககோன் கம்பளைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tag Words:#SriLankaPolice #PoliceTransfers #DIG #SSP #NationalPoliceCommission #LKA #BreakingNews2026 #PoliceNews #AdministrativeChanges #SecurityUpdate

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More