Home இலங்கை📢 அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு!

📢 அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு!

by admin

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவு அறிக்கை, நம் சமூகத்தின் எதிர்காலமான சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

📊  குறைந்த வயதில்  கர்ப்பமடைதல்: 2024-ஆம் ஆண்டுடன் (53 பேர்) ஒப்பிடுகையில், 2025-இல் 18 வயதுக்குட்பட்ட 79 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது பாரிய அதிகரிப்பைக் காட்டுகிறது.

கடந்த ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள் திருமணங்கள் பதிவாகியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டுடன் (14 திருமணங்கள்) ஒப்பிடும்போது சற்று குறைவடைந்துள்ளது.

நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி சிறுவர்களை அச்சுறுத்திய 150 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் அக்டோபர் மாதத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 8,514 முறைப்பாடுகளும், ஏனையவை: 1,941 முறைப்பாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

⚠️ சமூகப் பிரச்சினைகளும் பாதிப்புகளும்: 545 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 231 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

627 சிறுவர்களுக்கு அவசர உளவியல் சமூக ஆதரவு அல்லது ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.116 சிறுவர்கள் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பெற்றோர் கண்காணிப்பின்மை: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோர்கள் வெளிநாடு சென்ற சம்பவங்கள் 9 பதிவாகியுள்ளன. பிறப்புச் சான்றிதழ் இல்லாத 32 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

🛑 எச்சரிக்கை: நமது பிள்ளைகளின் இணையப் பயன்பாடு மற்றும் அவர்களின் நட்பு வட்டாரங்கள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சிறுவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறைக்கும் எதிராக குரல் கொடுப்போம்!

#ChildProtection #SriLanka #NCPA #SaveTheChildren #Awareness #SriLankaNews #ChildAbuseAwareness #CyberSafety #ProtectOurFuture #TamilNews #சிறுவர்பாதுகாப்பு #இலங்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More