Home இலங்கைசுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு!

சுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு!

by admin
சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.02.26), இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர்.
மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More