Home இலங்கைஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் – ஏர்பஸ் ஊழல் வழக்கு | புதிய திருப்பம்!

by admin
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அவர்களின் இளைய மகன் ஷமீந்திர ராஜபக்ச என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
✦ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாக கூறப்படும் பெரும் ஊழல் தொடர்பான வழக்கில், மூன்றாவது சந்தேகநபராக ஷமீந்திர ராஜபக்ச பெயரிடப்பட்டதன் பின்னணியிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
🔍 2012–2013 காலப்பகுதியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் படையில் இருந்த 13 விமானங்களை ஓய்வு பெறச் செய்து அதற்கு பதிலாக 14 புதிய விமானங்களை வாங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 6 A330, 4 A350 விமானங்களை வாங்குவதற்காக, பிரெஞ்சு நிறுவனம் Airbus உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
💰 வெளிச்சத்துக்கு வந்த லஞ்ச விவகாரம்- 2020 ஜனவரியில், பிரித்தானிய Serious Fraud Office (SFO) நடத்திய விசாரணையில், இந்த ஒப்பந்தத்துடன் தொடர்பாக US$ 16.84 மில்லியன் லஞ்சமாக வழங்க Airbus சம்மதித்திருந்தது தெரியவந்தது.
அதில், US$ 2 மில்லியன் முன்னாள் CEO கபில சந்திரசேன அவர்களின் மனைவி நடத்தும், புருனேய்யில் உள்ள நிறுவனக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், அந்த பணம் சிங்கப்பூர் வழியாக அவுஸ்திரேலியாவில் உள்ள கபில சந்திரசேனவின் வங்கிக் கணக்கிற்கு பல தடவைகள் மாற்றப்பட்டதும், மேலும் இலங்கையில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளுக்கும் பணம் வந்திருந்ததும் கண்டறியப்பட்டது.
⚠️ ஷமீந்திர ராஜபக்ச தொடர்பான விசாரணையில், 2013 ஆம் ஆண்டு, US$ 160,000 ஷமீந்திர ராஜபக்ச அவர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில்,அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இயக்குநர் குழு உறுப்பினராக இருந்ததாகவும், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான முக்கிய கூட்டங்களில் ஒன்றை சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடத்தியதாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
⚖️ ஷமீந்திர ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதாக CID நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அவரை கைது செய்ய, INTERPOL உதவி பெற Red Notice வெளியிட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில், முன்னாள் CEO கபில சந்திரசேன, அவரது மனைவி ஏற்கனவே சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனர். வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் Attorney General-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே, ஷமீந்திர ராஜபக்ச மூன்றாவது சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More