Home இலங்கை“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்”  

“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்”  

by admin

தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என  விதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தொிவித்துள்ளாா்.

கொழும்பில் இன்று (பெப்ரவரி 02, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே    உதய கம்மன்பில  இவ்வாறு  தொிவித்துள்ளாா்.

 மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தற்போதைய அரசாங்கம் பாரிய தோல்வியைச் சந்திக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அதனாலேயே தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்து வருகின்றனர்.    ஆட்சிக்கு வரும்போது இருந்த செல்வாக்குடன் ஒப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) வாக்கு வங்கி தற்போது 20 சதவீதம் வரை பாரியளவில் சரிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 புதிய கல்வி மறுசீரமைப்பை 2027 வரை பிற்போடுவதாக ஜனாதிபதி கூறுகிறார், ஆனால் அதனை அமுல்படுத்துவதாகப் பிரதமர் கூறுகிறார். அரசாங்கத்திற்குள் நிலவும் இந்த முரண்பாடான அறிவிப்புகள் நிர்வாகக் குழப்பத்தைக் காட்டுகின்றன.

 மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) காரியாலயத் தீர்மானங்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவதால், ஜனாதிபதியின் அறிவிப்புகளைப் பொருட்படுத்த வேண்டாம் என ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அறிவுறுத்தியுள்ளதாக  கம்மன்பில தெரிவித்தார்.

 இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தலை நடத்துவதாக உறுதியளித்த போதிலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாகும்.



Tag Words: #UdayaGammanpila #SriLankaPolitics #NPP #ProvincialCouncilElections #ColomboNews #LKA #ElectionUpdate2026 #PoliticalCrisis #TamilNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More