Home இலங்கை🔥 பதுளையில்   தீப்பரவல்: நான்கு பேர் வைத்தியசாலையில் 

🔥 பதுளையில்   தீப்பரவல்: நான்கு பேர் வைத்தியசாலையில் 

by admin

பதுளை நகரின் வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் இன்று (பெப்ரவரி 4, 2026) இடம்பெற்ற ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த நான்கு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயில் சிக்கி காயமடைந்த மற்றும் புகைமூட்டத்தினால் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நான்கு பேர் உடனடியாக மீட்கப்பட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதுளை மாநகரசபை தீயணைப்புப் படையினர், காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர். கட்டடத்திற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை.

Tag Words: #BadullaFire #EmergencyAlert #BadullaNews #FireAc

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More