244
மோடியின் பிம்பத்தை யாரால் கட்டமைத்தார்களோ, அவர்களே இப்போது அதை உடைக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பிரதமர் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார். அமெரிக்காவில் அதானி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, உண்மையில் பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கே ஆகும்.
சமீபகாலமாக அதானி குழுமம் மீதான சர்வதேச விசாரணைகள் மற்றும் அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசைத் தீவிரமாகச் சாடி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பம் தற்போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல ரகசியங்கள் இந்த ஃபைல்ஸில் உள்ளன. இவை அழுத்தத்தை மேலும் அதிகரிக்கின்றன. இந்த சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிந்து, நமது நாட்டின் உழைப்பையும் வளங்களையும் ஒரு வணிக ஒப்பந்தத்திற்காக மோடி விற்றுவிட்டார்.
“பிரதமர் மோடி நிலைகுலைந்து போயுள்ளார். அவரது பிம்பத்தின் மீதான அழுத்தம் அவரை பயப்பட வைத்துள்ளது.” என ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
________________________________________
இந்த பின்னணியில், “எப்ஸ்டீன் ஃபைல்ஸ்” மற்றும் சர்வதேச வணிக ஒப்பந்தங்கள் குறித்த ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

