Home உலகம்📺  சட்டவிரோத ‘Streaming’ கும்பல் கைது  – £3 மில்லியன் மோசடி அம்பலம்!

📺  சட்டவிரோத ‘Streaming’ கும்பல் கைது  – £3 மில்லியன் மோசடி அம்பலம்!

by admin

பிரித்தானியாவின் மிகப் பெரிய சட்டவிரோதத் தொலைக்காட்சி ஒளிபரப்பு (Streaming) கும்பலை லண்டன் காவல்துறையினா் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மில்லியன் கணக்கான நேயர்களுக்கு ‘ஃபயர் ஸ்டிக்’ (Fire Stick) மற்றும் ‘IPTV’ மூலம் சட்டவிரோதமாக திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பி வந்த கும்பலை சிட்டி ஒஃப் லண்டன் காவல்துறையினா் முடக்கியுள்ளனர்.

மான்செஸ்டர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 21 மற்றும் 40 வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்குவர். சுமார் £750,000 (இலங்கை ரூபாயில் சுமார் 28 கோடி) பெறுமதியான 10 சேர்வர்கள் (Servers) மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போல்டன் (Bolton) பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர், இந்தத் சட்டவிரோதத் தொழில் மூலம் £3 மில்லியனுக்கும் (சுமார் 112 கோடி ரூபாய்) அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக காவல்துறையினா் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்கை (Sky) போன்ற முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் போது சேர்வர்கள் முடக்கப்பட்டதால், பிரித்தானியா முழுவதும் சட்டவிரோதமாகப் பார்த்து வந்த மில்லியன் கணக்கானவர்களின் ஒளிபரப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன.

இவ்வாறான ‘டாட்ஜி’ (Dodgy) ஃபயர் ஸ்டிக்குகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், அதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படவும் (Malware) வாய்ப்புள்ளதாக காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கும்பல் முக்கியமாக சந்தா (Subscription) அதிகமுள்ள பிரீமியம் அலைவரிசைகளை மிகக்குறைந்த விலைக்கு வழங்கி வந்தது.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports), டிஎன்டி ஸ்போர்ட்ஸ் (TNT Sports) மற்றும் பிரீமியர் லீக் போட்டிகள், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி பிளஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றின் பிரத்யேகத் திரைப்படங்கள்,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முன்னணி பொழுதுபோக்கு சனல்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக வழங்கி வந்தமை தொிய வந்துள்ளது

பிரித்தானியாவின் ‘பதிப்புரிமை மற்றும் காப்புரிமைச் சட்டத்தின்’ (Copyright, Designs and Patents Act 1988) கீழ் இவை பெரும் குற்றங்களாகக் கருதப்படுகின்றன. சட்டவிரோத சேவையை உருவாக்குபவர்களுக்கு அல்லது விற்பனை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் வரம்பற்ற அபராதம் விதிக்கப்படலாம். குற்றத்தின் மூலம் ஈட்டிய சொத்துக்கள் (பணம், கார்கள், வீடுகள்) ‘குற்றவியல் வருமானச் சட்டத்தின்’ (POCA) கீழ் பறிமுதல் செய்யப்படும்.

அதேவேளை சட்டவிரோத ‘ஃபயர் ஸ்டிக்’ அல்லது லிங்குகளைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு காவல்துறை இப்போது எச்சரிக்கை கடிதங்களை (Cease and Desist) அனுப்பி வருகிறது. சில சந்தர்ப்பங்களில், இவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படலாம்.

தற்போது சிட்டி ஒஃப் லண்டன் காவல்துறையினா் முடக்கப்பட்ட சர்வர்களின் தரவுகளைக் கொண்டு, அந்தச் சேவையைப் பயன்படுத்திய மில்லியன் கணக்கானவர்களின் ஐபி (IP) முகவரிகளை சேகரித்துள்ளனர். இதன் மூலம் அந்தப் பயனாளர்களைத் தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Tag Words: #UKPolice #IllegalStreaming #FireStick #IPTVRaid #SkyTV #LondonPolice #CrimeNews2026 #PiracyCrackdown #LKA #BoltonNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More