Home உலகம்சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா?

சிரியாவில் பிலால் ஹசன் அல்-ஜாசிம் உயிரிழப்பா?

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல்!

by admin
சிரியாவில் பயங்கரவாத அமைப்பான ISIS-ஐ முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கடந்த ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
 ஐந்து இலக்குகள் மீது தாக்குதல்: சிரியா முழுவதும் உள்ள ISIS-இன் தகவல் தொடர்பு மையம், முக்கிய தளவாட முனையம் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது 50 துல்லியமான ஏவுகணைகள் (Precision Munitions) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 ‘ஒபரேஷன் ஹாக்கே ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike):
கடந்த டிசம்பர் 13 அன்று பல்மைராவில் (Palmyra) இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ISIS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 13 தாக்குதலுக்குக் காரணமான துப்பாக்கிதாரியுடன் நேரடித் தொடர்பில் இருந்த பயங்கரவாதத் தலைவர் பிலால் ஹசன் அல்-ஜாசிம், ஜனவரி 16 அன்று வடமேற்கு சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.
“இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ISIS மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதற்கான எங்களின் உறுதியைக் காட்டுகின்றன. எமது கூட்டணிப் படைகளுடன் இணைந்து செயல்படுவது அமெரிக்காவிற்கும் இந்த பிராந்தியத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்யும்.” — அட்மிரல் பிராட் கூப்பர் (CENTCOM தளபதி)
________________________________________
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More