212
மகன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு:
நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மேரிட் (Mette-Marit) மற்றும் அவரது மகன் மரியஸ் போர்க் ஹொய்பி (Marius Borg Høiby) ஆகியோரைச் சுற்றியுள்ள முறைப்பாடுகள் தற்போது உலகையே உலுக்கி வருகின்றன.
குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் இளவரசி மெட்டே-மேரிட் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011முதல் 2014 வரை இவர்கள் இடையே நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் பரிமாறப்பட்டு உள்ளன. அவற்றில் எப்ஸ்டீன் தான் ‘பெண் வேட்டையில்’ (Wife hunt) இருப்பதாகக் குறிப்பிட்டபோது, இளவரசி அவருக்குப் பதிலளித்த விதமும், “You make me smile” மற்றும் “You are such a sweetheart” போன்ற வாசகங்களைப் பயன்படுத்தியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தொடர்பு குறித்து இளவரசி தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இது ஒரு “தவறான முடிவு” என்றும் “மிகுந்த சங்கடத்தை அளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இளவரசியின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹொய்பி (29), தற்போது 38 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.இதில் நான்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (Rape) குற்றச்சாட்டுகளும் அடங்கும். இதற்கான நீதிமன்ற விசாரணை பெப்ரவரி 3, 2026 அன்று தொடங்கியது. மார்ச் மாதம் வரை இந்த விசாரணை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கத்தி காட்டி மிரட்டியது, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அத்துமீறல் போன்ற புகார்களில் அவர் கைதானது குறிப்பிடத்தக்கது.அரச குடும்பத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்கும் இந்த இரட்டைச் சிக்கல்கள் நார்வே மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
Spread the love

