Home உலகம்❄️ பிாித்தானியாவின்பல பகுதிகளுக்கு இன்று மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை 

❄️ பிாித்தானியாவின்பல பகுதிகளுக்கு இன்று மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை 

by admin

பிாித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை படிப்படியாகப் பனியாக மாறக்கூடும் என Met Office எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (பெப்ரவரி 6, 2026) நாட்டின் பல பகுதிகளில் மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகள் (Yellow Weather Warnings) அமுலில் உள்ளன. மழை மேகங்கள் வடக்கு நோக்கி நகரும் போது குளிர்ந்த காற்றுடன் மோதி, குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் பனியாக மாற வாய்ப்புள்ளது.

நேற்று மாலை முதல் இன்று அதிகாலை 3 மணி வரை அமுலில் இருந்த பனி எச்சரிக்கை தற்போது விலக்கப்பட்டிருந்தாலும், வடக்கு இங்கிலாந்தின் உயரமான பகுதிகளில் இன்னும் பனிப்பொழிவு காணப்படலாம்.

பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகள்:

North West England: கிரேட்டர் மான்செஸ்டர் (Oldham, Rochdale), கும்ப்ரியா, லங்காஷயர் மற்றும் செஷயர்.

East Midlands: டெர்பிஷயர்.

Yorkshire & Humber: வடக்கு மற்றும் மேற்கு யோர்க்ஷயர்.

North East England: டர்ஹாம் மற்றும் நார்தம்பர்லேண்ட்.

இதேவேளை நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இன்று இரவு 9:00 மணி வரை மஞ்சள் நிற மழை எச்சரிக்கை அமுலில் உள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து, தெற்கு வேல்ஸ் மற்றும் லண்டன் உட்பட தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள் பாதிக்கப்படும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

20-30 மிமீ மழை பெய்யக்கூடும், சில இடங்களில் 50 மிமீ வரை பதிவாகலாம். ஏற்கனவே மண் ஈரப்பதமாக இருப்பதால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வீதிகளில் நீர் தேங்குதல் (Surface water) மற்றும் பனி காரணமாக தரைவழி மற்றும் புகையிரத போக்குவரத்துகளில் தாமதங்கள் ஏற்படலாம் என்பதுடன் ஒரு சில பகுதிகளில் தற்காலிக மின்சாரத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.வாகன சாரதிகள் பனி மற்றும் வழுக்கும் தன்மையுள்ள வீதிகளில் பயணிக்கும்போது அதிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tag Words: #UKWeather #MetOffice #SnowWarning #YellowAlert #UKRain #TravelDisruption #LKA #BreakingNews2026 #NorthWestSnow

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More