Home இலங்கையாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்களால் ஊர்காவற்துறை காவற்துறையினருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அந்நிலையில் , காவற்துறையினர் புங்குடுதீவு பகுதியில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, கூரிய ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் உடைமையில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா கோடரி என்பவற்றை காவல் நிலையம் எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட இருவருடனும் சேர்ந்து இயங்கிய சிலரை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊர்காவற்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

________________________________________
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More