181
செல்லுலார் ரீப்ரோகிராமிங் (Cellular Reprogramming): முதுமையடைந்த செல்களை மீண்டும் இளமை நிலைக்கு கொண்டு செல்லும் அதிநவீன தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.
கேவலமான முதுமையைத் தடுத்து, ஆரோக்கியமான வாழ்நாளை அதிகரிப்பதே இதன் இலக்கு. இதற்காக சாம் ஆல்ட்மேன் தனது சொத்துக்களில் பெரும்பகுதியை இத்தகைய எதிர்காலத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
OpenAI-யின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், மனிதர்களின் ஆயுட்காலத்தை மேலும் 10 ஆண்டுகள் அதிகரிக்கச் செய்யும் நோக்கில், ‘ரெட்ரோ பயோசயின்சஸ்’ (Retro Biosciences) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் சுமார் $180 மில்லியன் (சுமார் ₹1,500 கோடி) முதலீடு செய்துள்ளார்.
திசு மறுசீரமைப்பு (Tissue Reprogramming): மரபணு சிகிச்சை (Gene Therapy) மூலம் உடலில் உள்ள திசுக்களைப் புதுப்பித்து, வயதாவதால் ஏற்படும் நோய்களைத் தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
AI-யின் பங்களிப்பு: OpenAI-யின் தொழில்நுட்ப உதவியுடன், செல்களை இளமையாக்கும் புரதங்களை (Yamanaka Factors) 50 மடங்கு அதிகத் திறனுடன் மாற்றியமைப்பதில் ரெட்ரோ பயோசயின்சஸ் வெற்றி பெற்றுள்ளது.
இனி மரணம் அல்லது முதுமை என்பது மாற்றியமைக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்குமா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிருங்கள்! 
Spread the love

