Home இலங்கைநாடாளுமன்ற ஓய்வூதியம் ரத்து – சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

நாடாளுமன்ற ஓய்வூதியம் ரத்து – சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது!

by admin
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பான “நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் நேற்று (வெள்ளிக்கிழமை, 06) நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக இல்லாத காரணத்தினால், இதனைப் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை (Simple Majority) மூலம் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த முழுமையான தீர்மானத்தை நேற்றைய நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் (Hansard) பதிவிடுமாறு சபாநாயகர் கட்டளையிட்டார்.
இந்த தீர்மானத்தின் மூலம் நாடாளுமன்ற ஓய்வூதிய நீக்கச் சட்டமூலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சட்ட ரீதியான தடைகள் நீங்கியுள்ளன.
________________________________________
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More