195
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பின்புறமாக அமைந்துள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்தபோது, அங்கிருந்த பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
உடனடியாக யாழ்ப்பாண காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் அந்தப் பொதியைச் சோதனையிட்டனர். அதன்போது கலிபர் ரக துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியவை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் யாழ். நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்னரே, வெடி பொருட்களின் முழுமையான விபரங்கள் மற்றும் அழிப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
#Jaffna #Srilanka #JaffnaTeachingHospital #ExplosivesFound #PoliceInvestigation #JaffnaNews #BreakingNews #யாழ்ப்பாணம் #செய்திகள் #வெடிபொருட்கள்
Spread the love

