Home இலங்கைபலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில்!

பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில்!

by admin
திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள், அனுமதியின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (09) காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தேரர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை அமைக்கப்பட்டு, புத்தர் சிலை வைக்கப்பட்டதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் திணைக்களம் முறைப்பாடு அளித்திருந்தது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருகோணமலை கடற்கரை பகுதிகளில் அண்மைக்காலமாக இவ்வாறான அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் திணைக்களம் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More