481
கடந்த ஜூன் 22, 2025 அன்று “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” (Operation Midnight Hammer) என்ற பெயரில் ஈரானின் ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
2025 ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ராட்சத குண்டுகள் இன்னும் வெடிக்காத நிலையில் அணுசக்தி மையங்களுக்குள்ளேயே இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.
மலைகளுக்கு அடியில் ஆழமாக அமைந்துள்ள அணுசக்தி மையங்களைத் தகர்க்க, அமெரிக்கா தனது மிக சக்திவாய்ந்த 14 தொன் (30,000 பவுண்டு) எடையுள்ள GBU-57 ரக ‘மேசிவ் ஆர்னன்ஸ் பெனட்ரேட்டர்’ (MOP) குண்டுகளைப் பயன்படுத்தியது.
ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தின் காற்றோட்ட வசதிக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக வீசப்பட்ட சில குண்டுகள், இலக்கை ஊடுருவியும் இன்னும் வெடிக்கவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
வெடிக்காத நிலையில் உள்ள இந்த ராட்சத குண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால், அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக அணுசக்தி மையங்களுக்குள் இவை இருப்பதால் கதிரியக்கக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் வரலாற்றிலேயே பி-2 (B-2 Spirit) மறைவியக்க விமானங்களைக் கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. எனினும், தனது அணுசக்தி இலக்குகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.
________________________________________
Spread the love

