181
ஒரு நகரத்தை (Self-growing city) வெறும் 10 ஆண்டுகளுக்குள் உருவாக்கிவிட முடியும். ஆனால், செவ்வாயில் நகரம் அமைக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாகும்.
செவ்வாய் கனவு கைவிடப்பட்டதா? இல்லை! நிலவில் பணிகளைத் தொடங்கி 5 முதல் 7 ஆண்டுகளில் செவ்வாயிலும் நகரக் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது. நிலவு ஒரு பயிற்சித் தளமாகவும், செவ்வாய் நீண்ட கால இலக்காகவும் இருக்கும்.
செவ்வாய்க்கு முன்னால் நிலவில் நகரம்! ஸ்பேஸ்எக்ஸின் அதிரடி மாற்றம் 
விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சி செய்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், தனது கவனத்தை இப்போது செவ்வாய் கிரகத்திலிருந்து நிலவின் பக்கம் திருப்பியுள்ளது. மனித நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே தங்களது முதன்மை நோக்கம் என்றும், அதற்கு நிலவே அதிவேகமான வழி என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை விண்கலங்களை அனுப்ப முடியும். பயண நேரம் வெறும் 2 நாட்கள் மட்டுமே!
கிரகங்கள் சரியாக நேர்கோட்டில் அமையும் 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பயணம் சாத்தியம். பயண நேரம் 6 மாதங்கள்.
நிலவு மிக அருகில் இருப்பதால், அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை மிக வேகமாகச் செய்ய முடியும்.
“நமது உணர்வையும் உயிரையும் நட்சத்திரங்கள் வரை கொண்டு செல்வதே எங்களின் லட்சியம்” என மஸ்க் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். 

Spread the love

