183
2026 ஜனவரி 1 முதல் இன்று வரை சுமார் 42 நாட்களாக பிரிட்டனில் மழை ஓய்ந்தபாடில்லை. டெவோன் (North Wyke), கார்ன்வால் (Cardinham) மற்றும் வொர்செஸ்டர் (Astwood Bank) ஆகிய இடங்கள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு துளி கூட ஓய்வின்றி 40 நாட்களுக்கு மேல் தொடர் மழையைப் பதிவு செய்துள்ளன.
இந்தத் தொடர்ச்சியான மழையினால் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மற்றும் அன்றாடப் பணிகள் வெகுவாகத் தடைப்பட்டுள்ளன. “இதற்கு ஒரு முடிவே இல்லையா?” என்று கேட்கும் அளவிற்கு மக்கள் மழையினால் சோர்வடைந்துள்ளனர். இருப்பினும், வரும் சனிக்கிழமை ஒரு குறுகிய காலத்திற்கு வெயில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் வானிலை வரலாற்றில் இது ஒரு முக்கியத் தருணமாகப் பார்க்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து இன்று வரை (பிப்ரவரி 11), நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் ஒவ்வொரு நாளும் மழை பதிவாகியுள்ளது.
வடக்கு அயர்லாந்து கடந்த 149 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக ஈரமான ஜனவரியைக் கண்டுள்ளது. காரணம் வளிமண்டலத்தில் நிலவும் தெற்கு நோக்கி நகர்ந்த ஜெட் ஸ்ட்ரீம் (Jet Stream) காற்றோட்டமே இந்தத் தொடர் மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் (Met Office) தெரிவித்துள்ளது.
Spread the love

