Home இலங்கைபொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய   நியமனங்கள்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய   நியமனங்கள்

by admin

  

மன்னார் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 11, 2026) நடைபெற்றது. அரசாங்கத்தின் புதிய கட்டமைப்பு மாற்றங்களுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (EDO) கடமையாற்றிய 34 பேர், தற்போது கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ‘சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக’ (CO) நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமன கடிதங்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் ம. காந்தீபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜே. ஜூட் மைக்கேல் ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய டாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்

நடுத்தர வர்க்க அரச ஊழியர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் மீது அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது. மக்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என தொிவித்தாா். சர்வதேச ஊழல் சுட்டெண்ணில் (Transparency International) இலங்கை 121-வது இடத்திலிருந்து 107-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் கடந்த கால ஊழல்களைத் துடைத்தெறிந்து, வெளிப்படைத் தன்மையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்கு எனத் தெரிவித்தார்.

இது ஒரு புதிய பணி என்பதால், உத்தியோகத்தர்கள் தனித்தனியாக முடிவெடுக்காமல் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும் உத்தியோகத்தர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் வரப்பிரசாதங்களை அமைச்சரவை மட்டத்தில் பேசி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இப்போது ‘சமூக வலுவூட்டல்’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதன் மூலம், கிராமிய மட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை (Social Safety Nets) இன்னும் வலுவாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ‘அஸ்வெசும’ போன்ற நலன்புரித் திட்டங்களை நிர்வகிப்பதில் இவர்களின் பங்கு முக்கியமானது.
 

Tag Words: #MannarNews #VanniMP #SocialEmpowerment #SriLankaGovernmentJobs #AntiCorruption #CommunityDevelopment #LKA #BreakingNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More