யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் (பெப்ரவரி 16, 2026, திங்கட்கிழமை) கொழும்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதேஇந்தக் கோாிக்கையை விடுத்துள்ளனா். பாரம்பரிய கரைவலை மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கவும், கடல் வளங்களை நிலைநிறுத்தவும் வேண்டியதன் அவசியத்தை இச்சந்திப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது பாரம்பரிய கரைவலை மீன்பிடித் தொழிலில் இயந்திரங்கள் (இயந்திரப் படகுகள் மற்றும் பெரிய வலைகள்) பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இயந்திரப் பயன்பாடு அதிகளவு மீன்களை அள்ளுவதால், கடல் வளங்கள் வெகுவாக அழிந்து வருகின்றன. இதனால் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தும் சிறு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அவர்களால் இயந்திரப் படகு மீனவர்களுடன் போட்டியிட முடிவதில்லை என்பதனை சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டினா். .
இதனையடுத்து “பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும், எமது மீனவ சமூகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.”
“கரைவலைத் தொழிலில் இயந்திரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசனைகள் பெறப்படும்.”
“எமது கடல் வளங்களைப் பாதுகாத்து, எதிர்கால தலைமுறைகளுக்கான நிலைத்த கடற்றொழிலை உறுதி செய்வதே எமது நோக்கம்.” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதிமொழி வழங்கினாா்
இந்த முக்கிய சந்திப்பின் போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோரும் உடனிருந்தனர்.

Tag Words:
#JaffnaFisheries #BeachSeineFishing #TraditionalFishermen #MinisterChandrasekar #SeaResources #LKA #FishermenRights

