Home இலங்கைக.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சைகள் இன்று ஆரம்பம்

க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சைகள் இன்று ஆரம்பம்

by admin

 

 

2025-ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சைகள் இன்று (பெப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் மிகவும் உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளன. பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு பரீட்சைக்கான ஏற்பாடுகள் மிகவும் பலமாக செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 3,545 மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் : 451,463 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை நடவடிக்கைகள் முறையாக ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்குச் சமூகமளிப்பதை அவதானிக்க முடிந்தது.மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 32 மையங்கள் செயற்படுகின்றன. இம்மாவட்டத்தில் மட்டும் 3,224 மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர்.

பரீட்சை வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, மாணவர்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே மண்டபங்களுக்கு வருகை தந்து தமது ஆசனங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

Tag Words:
#OL2025 #SriLankaExams #MannarNews #EducationSL #ExaminationDepartment #BreakingNewsSL #LKA

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More