272
இதுவரை சுமார் 35 லட்சம் (3.5 Million) பக்கங்கள் மட்டுமே பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன. எப்ஸ்டீன் வழக்கில் மொத்தம் 60 லட்சம் (6 Million) பக்கங்கள் வரை கோப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கும் மேலான கோப்புகள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
அரசின் இந்தத் திடீர் முடிவுக்கு சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்களைப் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மறைந்த கோடீஸ்வரர் மற்றும் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான கோப்புகளை இனி வெளியிடப்போவதில்லை என அமெரிக்க நீதித்துறை (DOJ) அறிவித்துள்ளது. இதனால் உலகமே எதிர்பார்த்த பல முக்கிய உண்மைகள் மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சட்டரீதியான கடமைகளைத் தாங்கள் நிறைவேற்றிவிட்டதாகவும், எஞ்சிய கோப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் இருப்பதால் அவற்றை வெளியிட முடியாது என்றும் அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்ஸ்டீன் கோப்புகள் முழுமையாக வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதியிலேயே நிறுத்தப்படுவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. கோப்புகளில் இருந்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பல இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. எஞ்சிய 25 லட்சம் கோப்புகளில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதுதான் இப்போது அனைவரின் கேள்வியும்!
________________________________________
Spread the love

