Home இலங்கை🚌 வாகனம் செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்தியஅரச பேருந்துச் சாரதிக்கு தண்டனை:

🚌 வாகனம் செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்தியஅரச பேருந்துச் சாரதிக்கு தண்டனை:

by admin

பயணிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட சாரதி ஒருவருக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை இந்த உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளது. வவுனியா சாலையைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) சாரதி ஒருவர் பேருந்தைச் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியுள்ளார்.இது குறித்த காணொளி அல்லது புகைப்பட ஆதாரம் பொதுமக்கள் தரப்பிலிருந்து அதிகார சபைக்குக் கிடைத்துள்ளது.இதனையடுத்து சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய ‘மீட்டல் பயிற்சி’ (Refresher Training) வழங்க வட பிராந்திய முகாமையாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் எவருக்கும் பாரபட்சமின்றித் தண்டனை வழங்கப்படும்” என அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனியார் அல்லது அரச பேருந்து சாரதிகள் விதிமீறலில் ஈடுபட்டால், பொதுமக்கள் இப்போது நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.

முறைப்பாடு செய்ய வேண்டிய இலக்கம்: 0719090900

முறை முறை: WhatsApp ஊடாக ஆதாரங்களை (புகைப்படம் அல்லது காணொளி) அனுப்பலாம்.

முறைப்பாட்டிற்கான காரணங்கள்:

வாகனம் செலுத்தும் போது கைப்பேசி பேசுதல்.

அதிவேகமாகச் செலுத்துதல்.

கவனயீனமாக அல்லது ஆபத்தான முறையில் செலுத்துதல்.

Tag Words:
#VavuniyaNews #RoadSafetySL #SLTB #NorthernProvinceTransport #BusDriverFined #PublicSafety #LKA #WhatsAppReport

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More