211
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் காணிப் பிரச்சினை காரணமாக முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரையும் கோப்பாய் காவற்துறையினர் இன்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர்.
கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் 59 வயதுடைய செல்லத்துரை செல்வரஞ்சன் அடித்துக் கொல்லப்பட்டார். காரணம் நீண்டகாலமாக நிலவி வந்த காணிப் பிரச்சினை கடந்த திங்கட்கிழமை கைக்கலப்பாக மாறியுள்ளது.
மூன்று பேர் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில் செல்வரஞ்சன் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் கடந்த திங்கட்கிழமை முதலாவது சந்தேகநபரை கைது செய்தனர்.
நேற்று இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். (இவர்கள் இருவரும் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் உள்ளனர்).
இன்று (புதன்): கைதடி பகுதியில் மறைந்திருந்த மூன்றாவது சந்தேகநபரை காவற்துறை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்றாவது சந்தேகநபர் நாளை (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். கோப்பாய் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love

