Home இலங்கைமுகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்

முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடிதங்களை முகநூலில் பதிவிட்ட தாளையடி அஞ்சல் அலுவலகம்

by admin

 

முகவரியை தேடி கண்டறிய முடியாதவர்களின் கடித முகவரியை தமது முகநூலில் பகிர்ந்து , அலுவலகத்தில் வந்து கடிதத்தினை பெற்றுக்கொள்ளுமாறு தாளையடி அஞ்சல் அலுவலகம் கோரிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி அஞ்சல் அலுவகத்தினால் , தமது பிரதேசத்திற்கு வந்த கடிதங்களின் முகவரியை கண்டறிந்து கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பிக்க முடியாத கடிதங்களை , அவற்றின் முகவரியுடன் தமது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டு , உரியவர்கள் அலுவலகத்தில் வந்து கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளனர்.

தனிப்பட்ட நபர்களின் விபரங்களை பொது வெளியில் பகிர்வது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் , தற்போது குறித்த பதிவுகளை அஞ்சல் அலுவலகத்தினர் தமது உத்தியோகபூர்வ முகநூலில் இருந்து நீக்கியுள்ளனர்

#ThalayadiPostOffice #JaffnaNews #PostOfficeScandal #PrivacyBreach #Vadamarachchi #SriLankaPostal #SocialMediaEthics #LKA

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More