நேபாளத்தின் போக்காராவிலிருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, அதிகாலை தாதிங் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நியூசிலாந்து நாட்டைச் சோந்த வெளிநாட்டுப் பயணி உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனா் என தொிவிக்கப்படுகின்றது. மேலும் ஜப்பான் மற்றும் டச்சு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 26-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்கள் சிகிச்சைக்காக காத்மாண்டு மற்றும் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சுமார் 300 மீற்றா் பள்ளத்தில் உருண்டு ஆற்றுக்குள் விழுந்துள்ளது. விபத்து நடந்தவுடன் நேபாள இராணுவம், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்து அதிவேகமாகச் சென்றதே விபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும் நேபாளத்தின் மலைப்பாங்கான சாலைகள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் இத்தகைய விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதே திரிசூலி ஆற்றில் கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டு பேருந்துகள் விழுந்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
# NepalBusCrash #TrishuliRiver #NepalNews #BreakingNewsTamil #AccidentAlert #KathmanduNews

