198
கொழும்பு துறைமுக நகர (Port City) கடற்பரப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகக் காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு துறைமுகக் காவல் நிலைய அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Spread the love

