Home இலங்கைகப்பூது காட்டுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

கப்பூது காட்டுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

by admin
பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்தினரால், நேற்றைய தினம் திங்கட்கிழமை கப்பூது காட்டுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு கசிப்பு,கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி வே.ரஷிகரன் தலைமையில் மதுவரிப் பரிசோதகர் கனநாதன் குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையின் போதே 115லீற்றர் கசிப்பு,1010லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் தப்பித்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மதுவரி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ளனர்.
#PointPedro  #பருத்தித்துறை  #ExciseRaid  #மதுவரி_முற்றுகை  #KapputhuForest  #கப்பூது_காடு #IllegalLiquor
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More