218
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அந்நாட்டுத் தலைமைத்துவ வளாகத்தின் கீழே அமைந்துள்ள அதிநவீன நிலத்தடி பதுங்கு குழி மீது இஸ்ரேல் இராணுவம் இன்று (பெப்ரவரி கடந்து மார்ச் 6ஆம் திகதி) பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையில் இஸ்ரேலிய விமானப்படையின் சுமார் 50 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
ஈரானின் தலைமைத்துவ வளாகத்திற்கு அடியில் உள்ள பதுங்கு குழியை இலக்கு வைத்து சுமார் 100 வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
இந்த நிலத்தடி வசதியானது, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி போர்க்கால நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்காக பிரத்யேகமாக கட்டப்பட்டது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
கமேனி ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தாலும், இந்த வளாகம் ஈரானிய ஆட்சியின் மூத்த அதிகாரிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்ததால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தெஹ்ரானின் பல வீதிகள் வரை பரந்து விரிந்துள்ள இந்த நிலத்தடி தளம், இஸ்ரேலின் துல்லியமான வான்வழித் தாக்குதலில் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. இத்தாக்குதலால் அப்பகுதி முழுவதும் கடும் அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பெப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த மோதல்கள், தற்போது ஈரானின் முக்கிய இராணுவக் கட்டமைப்புகளை அழிக்கும் நிலையை எட்டியுள்ளன. அப்பகுதியில் ஈரானிய காவற்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Spread the love

