182
ஈரானில் பதற்றம்: மெஹ்ராபாத் வானூர்தி நிலையம் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள மெஹ்ராபாத் சர்வதேச வானூர்தி நிலையம் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து இன்று (மார்ச் 7, 2026) பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
சுமார் 80 போர் விமானங்கள் மூலம் 230-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வானூர்தி நிலைய ஓடுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானூர்திகள் தீப்பற்றி எரிவதாகவும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் காணொளிகள் காட்டுகின்றன.
ஈரானிய புரட்சிகர காவல்படைக்குச் (IRGC) சொந்தமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள் மற்றும் இராணுவ நிலைகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 திகதி ஈரானிய உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானிய வான் பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்து வருவதால், பிராந்தியம் முழுவதும் பெரும் போர்ச் சூழல் நிலவுகிறது.
Spread the love

