222
யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக காவல்துறையினா் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்
இந்தியாவின் செய்மதி தொலைக்காட்சி சேவைகளை பெற்று கொள்வதற்கான , சன் டிராக்ட், வீடியோ கோன், டாட்டா ஸ்கை , டிஸ் ரிவி போன்ற டிஸ் அன்ரனாக்களை விற்பனை செய்யும் நிலையங்கள், மற்றும் அவற்றுக்கான தொலைக்காட்சி சேனல்களுக்கான கட்டணங்களை அறவீடு செய்யும் நிலையங்களுக்கு எதிராகவே காவல்துறையினா் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிகள் இன்றி அவை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு , விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டு வருவதனால் நாட்டிற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதனால் , அவை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவி க்கப்படுகிறது.
#JaffnaPolice #SatelliteTVBan #IllegalSales #TRCSriLanka #JaffnaNews
Spread the love

