200
இவர் ஓஹியோவில் உள்ள ரைட்-பேட்டர்சன் (Wright-Patterson) தளத்தில் உள்ள விமானப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவராகப் பணியாற்றியவர். 1947ஆம் ஆண்டு ரோஸ்வெல் (Roswell) விபத்தில் சிக்கிய வேற்று கிரகவாசிகளின் உடல்கள் மற்றும் சிதைவுகள் இந்தத் தளத்தில்தான் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நீண்டகாலமாக ஒரு வதந்தி நிலவுகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது மனைவி சூசன் மெக்காஸ்லாண்ட் வில்கர்சன் கருத்துத் தெரிவித்துள்ளார்:
அல்புகர்க்கி பகுதியில் உள்ள சுமார் 600 வீடுகளில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய காவற்துறை (Bernalillo County Sheriff’s Office) பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இதுவரை அவர் குறித்து எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விமானப்படையின் ஓய்வுபெற்ற ஜெனரல் வில்லியம் “நீல்” மெக்காஸ்லாண்ட், கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் அல்புகர்க்கி (Albuquerque) பகுதியில் காணாமல் போயுள்ளார். 68 வயதான இவர் காணாமல் போய் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், பல்வேறு மர்மமான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இவர் ஓய்வுபெற்ற பிறகு, அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்து ஆய்வு செய்யும் டோம் டெலோங் (Tom DeLonge) என்பவருடன் சிறிய அளவில் தொடர்பில் இருந்துள்ளார்.
“ரோஸ்வெல் விபத்து அல்லது வேற்று கிரகவாசிகளின் உடல்கள் குறித்து நீலுக்கு எந்தவிதமான விசேட இரகசியத் தகவல்களும் தெரியாது. UFO சமூகத்துடனான அவரது தொடர்பு, யாராவது அவரைக் கடத்துவதற்கு ஒரு காரணமாக இருக்க முடியாது.”
Spread the love

